தன் விவரக்குறிப்பு
சோலை சுந்தரபெருமாள்
|
Blogger http://solaivandal.blogspot.in/
|
||||
இயற்பெயர்
|
சுந்தரபெருமாள்
|
||||
பெற்றோர் பெயர்
|
சுப்பிரமணியப்பிள்ளை
- கமலம்
|
||||
பிறந்த ஊர்
|
காவனூர்
|
||||
பிறந்த தேதி
|
09.05.1953
|
||||
கல்விச்சான்றின்படி
பிறந்த தேதி
|
18.01.1952
|
||||
கல்வித்தகுதி
|
முதுகலைத்
தமிழ், இளங்கலைக் கல்வியியல்.
|
||||
வாசிப்பின் தொடக்கம்
|
ஏழாம்
வகுப்பு படிக்கும் காலத்தில் தொடங்கியது. ராணி இதழில் வெளிவந்த `மாயக்குதிரை’
தொடர்கதை.
|
||||
இலக்கியப்படைப்பின்
இலக்கு
|
ஒருங்கிணைந்த தஞ்சைமாவட்டப் பெரும்பான்மை
படைப்பாளிகளிடமிருந்து மாறுபட்டு, கதைக்கருவை தேர்வு செய்தல்... இம்மண்ணில் வாழும் பெரும்பாலான
வேளாண்மக்களின் வாழ்வியலையும் - உழுவித்து உண்பவர்கள், உழுதுண்பவர்கள் ஆகிய
இவர்களின் வாழ்வியலையும், பண்பாட்டு அம்சங்களையும் நுட்பமாகப் படைப்பாக்குதல்...
|
||||
முதல்
படைப்புகள்: `மனசு’ (குறுநாவல்)
|
1987
இல் `கலைமகள்’ இலக்கிய இதழ் நடத்திய
அமரர் இராம ரெத்தினம் நினைவுப் போட்டியில் பரிசுப் பெற்றது. தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்டு பண்ணை
அடிமைகளாகக் கிடந்த மக்களில் குறிப்பாய் பெண் எப்படி ஒடுக்கப்பட்டாள் என்பதை
உள்ளடக்கமாக கொண்டது.
|
||||
`தலைமுறைகள்’
- முதல் சிறுகதை
1980
முதல் படைப்புப் பயிற்சியில் விளைந்த கதைகள்
|
1989
இல் `தாமரை` இலக்கிய இதழில் வெளிவந்தது. இம்மண்ணுக்குப் பஞ்சம் பிழைக்க வந்து, சாலை
அமைப்புப்பணியில் ஈடுபட்ட ஒட்டர் சமூகத் தொழிலாளிகளின் வாழ்வியலைப்
பின்னணியாகக் கொண்ட சிறுகதை. அம்மாத இதழில் வெளிவந்த சிறந்த சிறுகதையாகத்
தேர்வு பெற்று `ஈ.எஸ்.டி’ நினைவுப் பரிசினைப் பெற்றது.
`பொன்னியின்
காதலன்’ (மரபுக்கவிதை) `ஓ செவ்வந்தி’
`நீரில் அழும் மீன்கள்’ `மரத்தைத் தாங்கும் கிளைகள்’ `கலியுகக் குற்றங்கள்’
`நெறியைத் தொடாத நியாயங்கள்’ இவை அனைத்தும் ஒரு ரூபாய் விலையில்
மலிவுப்பதிக்காக வெளிவந்தன.
|
||||
1986
கவிதைத்தொகுப்பு
|
`தெற்கே
ஓர் இமயம்’
|
||||
1990
நாவல்
|
`உறங்கமறந்த
கும்பகர்ணர்கள்’ - 1990’ல் வெளிவந்த சிறந்த நாவல்களுள் ஒன்றாகத் தேர்வு
செய்யப்பட்டது - சுபமங்களா இதழ்.
|
||||
1991
சிறுகதைத்தொகுதி
|
`மண்
உருவங்கள்’ - பாரத ஸ்டேட் வங்கியும் தமிழ்நாடு எழுத்தாளர் வாரியமும் இணைந்து
வழங்கிய விருது.
|
||||
1992
நாவல்
|
`ஒரே
ஒரு ஊர்ல’ - உலகளாவிய உன்னத மானிட நேய
சேவை மையம் வழங்கிய விருது. (சென்னை)
|
||||
1993
சிறுகதைத்தொகுதி
|
`வண்டல்’
1.
தமிழ்நாடு கலை இலக்கியப்
பெருமன்றம் - என்.சி.பி.எச் நிறுவனமும் இணைந்து வழங்கிய பாரதி நினைவு விருது.
2.
கோவை லில்லி தேவசிகாமணி அறக்கட்டளை -`
ஈ.எஸ்.டி’ நினைவு இலக்கிய விருது
|
||||
1993
குறுநாவல் தொகுதி
|
`மனசு’
- நான்கு குறுநாவல்கள் அடங்கியது. பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருது.
|
||||
1995
சிறுகதைத் தொகுதி
|
`ஓராண்காணி’
- திருப்பூர் தமிழ்ச்சங்க விருது.
|
||||
1996
சிறுகதைத் தொகுதி
|
`ஒரு
ஊரும் சில மனிதர்களும்’ -பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருது.
|
||||
1998
நாவல்
|
`நஞ்சை
மனிதர்கள்’ திருப்பூர் தமிழ்ச்சங்க
விருது.
|
||||
1999
நாவல்
|
`செந்நெல்’
(2010 இல் பத்தாம் பதிப்பு)
1. தமிழக அரசின் பரிசு.
2.
தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் வழங்கிய பாரதி விருது.
3.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வழங்கிய பெருமாயி - குப்பண்ணன் நினைவு
நாவலுக்கான விருது.
4.
பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருது.
|
||||
2000
சிறுகதைத் தொகுதி
|
`வட்டத்தை
மீறி’
|
||||
2002
நாவல்
|
`தப்பாட்டம்’
- பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருது.
|
||||
2005
நாவல்
|
‘பெருந்திணை’
தஞ்சை ப்ரகாஷ் - நினைவு இலக்கிய விருது. நினைவு இலக்கிய விருது.
தொண்ணூறுகளுக்குப் பிறகு தமிழ் இலக்கியத்தின் முகம் – எழுத்தாளர் திலகவதி
அவர்களால் தொகுக்கப்பட்ட 26 நாவல்களில் பெருந்திணையும் ஒன்று – அவர்கள் தொகுத்த
‘காலத்தின் கண்ணாடி’ (2005) தொகுப்பில் ‘பெருந்திணை’ நாவல் இருந்து பத்து
பக்கங்கள் இடம் பெற்றுள்ளன.
|
||||
2006
சிறுகதைத் தொகுதி
|
`மடையான்களும்
சில காடைகளும்’
|
||||
2006
குறுநாவல் தொகுதி
|
`குருமார்கள்’
|
||||
2007
நாவல்
2010
சிறுகதைத் தொகுதி
|
`மரக்கால்’
கோவை கஸ்துhரி சீனிவாசன்
அறக்கட்டளை வழங்கிய நாவலுக்கான விருது.
`வெள்ளாடுகளும்
சில கொடியாடுகளும்’
|
||||
2010
கட்டுரை
|
`தமிழ்மண்ணில்
திருமணம்’
|
||||
2011
கட்டுரைத் தொகுப்பு
|
`மருதநிலமும்
சில பட்டாம் பூச்சிகளும்’
|
||||
2011
நாவல்
|
`தாண்டவபுரம்’
|
||||
2014
நாவல்
|
`பால்கட்டு’
|
||||
2014
சிறுகதைத் தொகுதி
|
`கப்பல்காரர்
வீடு’
|
||||
2015
நாவல்
2014
கட்டுரை
2015
சிறுகதைத்தொகுதி
2016
வண்டல் கதைகள்
2016
குறுநாவல்கள்
|
‘எல்லை
பிடாரி’ (‘கவிதை உறவு’ 2015க்கான பரிசு)
‘வண்டல்
உணவுகள்’
‘முத்துக்கள்
பத்து’ - முத்திரைக் கதை வரிசை எழுத்தாளர் திலகவதி அவர்களால் தேர்வு செய்யப்
பட்டு அம்ருதா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது.
இரண்டு
தொகுதிகள் - என்னால் எழுதப்பட்ட எண்பது சிறுகதைளின் தொகுப்பு (பதிப்பில்)
‘காத்திருக்கிறாள்’
குறுநாவல் தொகுதி (பதிப்பில்)
|
||||
பதிப்பித்தவை
|
|||||
1999
சிறுகதைகளின் தொகுப்பு
|
`தஞ்சை
சிறுகதைகள்’ (கா.சி. வேங்கடரமணி முதல் யூமா.வாசுகி வரை) (ஐம்பது படைப்பாளிகளின்
சிறுகதைகளை உள்ளடக்கமாகக் கொண்டது. ஒவ்வொருவரின் படைப்புகளில் முத்திரைப்
பதித்த ஒரு சிறுகதையோடு அவர்களைப் பற்றிய குறிப்பும், பருந்து பார்வையோடு கூடிய
மதிப்பீடும் உள்ளடக்கமாக கொண்டது)
|
||||
2000
சிறுகதைகளின் தொகுப்பு
|
`தஞ்சை
கதைக்களஞ்சியம்’ (உ.வே.சாமினாதய்யர் முதல் சிவக்குமார் முத்தைய்யா வரை)
|
||||
2001
கட்டுரைகளின் தொகுப்பு
|
வெண்மணியும்
44 பிடிசாம்பலும் - `செந்நெல்’ நாவல்
குறித்து வந்த விமார்சனங்களின் தொகுப்பு.
|
||||
2002
நாவல்
|
மூவாலூர்
ராமாமிர்தம்மாள் அவர்களின் `தாசிகளின் மோசவலை’ அல்லது `மதிபெற்ற மைனர்’- நாவலாசிரியர் 1932 இல்
சொந்த பிரசுரமாக வெளிவந்த பின்னர் அதனை கண்டடைந்து பதிப்பித்தது.
|
||||
2008
நாட்டுப்புறச்சிறுகதைகள்
|
கீழத்தஞ்சையை
இலக்காகக் கொண்டு காவனுhர், அம்மையப்பன் பகுதியில் வாழ் கதைச்சொல்லிகளிடம் கேட்டுத் தொகுத்தது.
|
||||
2010
வாய்மொழி வரலாறு
|
கீழத்தஞ்சையை
உள்ளடங்கிய பகுதிகளில் மக்களுக்குப்
பணியாற்றிய தலைவர்களின் அனுபவப்
பகிர்வு. (ஒடுக்கப் பட்ட மக்கள் படைப்புகளுக்கான அமரர்.சு.சமுத்திரம் அவர்களின்
நினைவுப் பரிசு)
|
||||
ஒட்டு மொத்த
படைப்புகளுக்கான விருதுகளும் – பதிவுகளும்
|
|||||
1.
2008 தஞ்சாவூர் ராமசாமி - மாரியம்மாள் கல்வி அறக்கட்டளை
வழங்கிய ஒட்டு மொத்த படைப்பு சாதனைகளுக்கான விருது.
|
|||||
2.
2008 நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம் நடத்தும் புத்தகக்கண்காட்சியில் வழங்கப்பட்ட
சிறந்த நாவலாசிரியருக்கான விருது.
|
|||||
3.
2007 `தஞ்சை ஈன்ற தங்கங்கள்’ என்று சிறப்பித்து தினமணி
நாளேட்டின் பொன்விழா மலரில் வெளியீடு செய்திருந்தது. அம்மலரில் மண்டலவாரியாக
ஒவ்வொரு துறையிலும் சாதனைப்படைத்தவர்களைத் தேர்வு செய்திருந்தனர். தஞ்சை
மண்டலத்தில் பிறந்து வளர்ந்தவர்களான கணிதமேதை ராமானுஜம் தொடங்கி கலைஞர்
மு.கருணாநிதி, செம்பங்குடி சீனிவாசய்யர், உ.வே. சாமினாதய்யர் போன்றோர்
வரிசையில் சோலை சுந்தரபெருமாளையும்
இடம் பெற்றச் செய்திருந்தனர்.
|
|||||
4.
தமிழில் வந்துள்ள சிறந்த பத்து நாவல்கள் தேர்வில்
மாயூரம் வேதநாயகம்பிள்ளையின் `பிரதாப முதலியார் சரித்திரம்’ தொடங்கி `செந்நெல்’
வரை இடம் பெற்று இருந்தன. இந்த சிறந்த நாவல்களைத் தேர்வு செய்தவர் விமர்சகர்
வெங்கட்சாமினாதன். வெளியீடு குமுதம் தீபாவளி மலர் 2006.
|
|||||
5.
தமிழில் வெளிவந்துள்ள சிறந்த பத்து நாவல்கள்
தொ.மு.சி.ரகுநாதனின் `பஞ்சும் பசியும்’ தொடங்கி `செந்நெல்’ வரை இடம்பெறச்
செய்தவர் ஆய்வாளர் தி.க.சிவசங்கரன். வெளியீடு 2006 `செம்மலர் பொங்கல் மலர்’
|
|||||
6.
`மண்ணாசை’ சிறுகதையை
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் பத்தாம் வகுப்பு துணைப்பாட நுhலில் 1999--
2012 வரை இடம் பெறச் செய்திருந்தது. `ராஜாஜி தொடங்கி சோலைசுந்தரபெருமாள் வரை’
பத்து சிறுகதை ஆசிரியர்களின் சிறுகதைகளை உள்ளடக்கிய நூலாக வெளிவந்தது.
|
|||||
7
`செந்நெல்’ நாவல், 2000
ஆண்டு தொடங்கி பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,
பாரதியார் பல்கலைக்கழகம், மனோன்மணிசுந்தரம்பிள்ளை பல்கலைக்கழகம் போன்ற
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், தன்னாட்சிக்கல்லுரிகளிலும்
இளங்கலை முதுகலை வகுப்புகளின் பாடத்திட்டத்தில் இடம் பெற்று இருந்தது. இன்றும்
சிலவிடங்களில் தொடர்கின்றன.
|
|||||
8 பத்துக்கு மேற்பட்டப் பல்கலைக் கழகங்களில்
ஒட்டு மொத்தப் படைப்புகளிலும், தொகுத்தும், பிரித்தும் நூற்றுக்கு
மேற்பட்டவர்கள் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
|
|||||
9 மன்னார்குடியில் நடந்த தமிழ்நாடு
கலைஇலக்கியப் பெருமன்ற மாநில 11 வது மாநாட்டில் ஒட்டுமொத்த படைப்பாளுமையைப்
பாராட்டி சிறப்பு செய்யப்பட்டது.
|
|||||
மொழிபெயர்ப்பு
|
|||||
"செந்நெல்’’ நாவல், முனைவர் தாமஸ் அவர்களால்
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த மொழிபெயர்ப்புக்கு மேலாய்வு
ஆசிரியராகப் பணியாற்றியவர் பிரபல மொழிபெயர்ப்பாளர் லதா ராமகிருஷ்ணன் அவர்கள்.
|
|||||
வெளியீடு
செய்துள்ள பதிப்பகங்கள்.
|
1.
கமலம் பதிப்பகம் திருவாரூர்
2.
தமிழ்ச்சோலை, சென்னை.
3.
காவ்யா, பெங்களூர்.
4.
சிவசக்தி, நாகை.
5.
நிவேதிதா, ஆலயா, சென்னை.
6.
நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
7.
பாரதி புத்தகாலயம், சென்னை.
|